2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

அமைச்சர் பஷில் மட்டக்களப்பு விஜயம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 15 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

வெள்ள நிலைமைகளை அவதானிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட உயர் மட்ட குழுவினர் இந்தய விஜயத்தில் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தின் வெள்ள நிலைவரம் குறித்த உயர்மட்ட மாநாடு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், பிரதியமைச்சர்களான வி.முரளிதரன், பஷீர் சேகு தாவூத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மாகாண அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வுயர்மட்ட குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நலன்புரி முகாம்களையும்  பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--