Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜனவரி 16 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன், கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு குறைபாடுகளை கேட்டறிந்தனர்.
வெள்ளம் காரணமாக மண்டூர் வெள்ளைப்பாலம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் மண்டூர் எழுவான்கரை தரைவழிப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்காக பட்டிருப்பு பாலத்திலிருந்து களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இயந்திரப்படகு மூலம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மண்டூருக்கு விஜயம் செய்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வயிற்றோட்டம் காய்ச்சல், வாந்திபேதி, அஸ்மா போன்ற நோய்கள் அதிகளவு காணப்படுகின்றன.
மட்டக்களப்பில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவுவதால் முகாம்களில் உள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன் வீடுகளுக்கு திரும்பிய மக்கள் வீட்டு சூழலை சுத்தம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
கூடுதலாகப் பாதிக்கப்பட்ட படுவான்கரைப் பகுதியில் தற்போது பல முகாம்களில் மக்கள் தொடர்ந்தும் உள்ளனர். தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது சிரமமாய் உள்ளது.
படுவான்கரைப் பகுதியில் தற்போதும் பல வீதிகள் நீர் வடியாமல் உள்ளமையினால் அப்பகுதி போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
1 hours ago