Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
பிரதேசசபைகள் மற்றும் நகரசபை மாநகரசபைகள் கழிவுகளை அகற்றுகின்ற பணியினை துரிதப்படுத்த வேண்டும். பழுதடைந்த பாதைகள், மதகுகள், கல்வெட்டுக்களை சீரமைத்தல் மற்றும் சுகாதாரம் பேணல் போன்றவற்றை அதிகாரிகள் சிறப்பாகவும் விரைவாகவும் முன்னெடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது வெள்ளம் முற்றாக வடிந்துள்ள நிலையில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதுடன் கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தினை இயக்குவது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று முதலமைச்சர் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஷஷ
தொற்றுநோய் பரவுவதை தடுப்பதில் உள்ளூராட்சிமன்றங்களுக்கும் பாரிய பணி உள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாகாணத்தின் நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்தது.
பாடசாலைகளை இயங்க வைத்தல், பாதைகளை புனரமைத்தல், அனைத்து அரச அலுவலகங்களின் செயற்பாடுகளையும் மீள ஒழுங்கமைத்தல், பிரதேசசபைகளின் செயற்பாடுகளை துரிதப்படுத்தல், கழிவுகளை அப்புறப்படுத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. நலன்புரி நிலையங்களாகவுள்ள பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகளை திங்கட்கிழமை ஆரம்பித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி அமலநாதன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மா.உதயகுமார், மாநகர ஆணையாளர் எஸ். சிவநாதன்;, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சத்தியானந்தி பிரதேசசபையின் செயலாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
21 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago