2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரண பொருள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 17 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் இன்று எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கையளிக்கப்பட்டன. தம்புள்ள பௌத்த தேரர்கள், களுவாஞ்சிகுடி பொலிஸார் இணைந்து இந்த நிவாரணப் பொருட்களை கையளித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மானவடுவின் நேரடி கண்காணிப்பில் கையளிக்கப்பட்ட பொருட்களில் அரிசி, தேங்காய், சவர்க்காரம், பால்மா உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--