Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 18 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
எமது செயலக எல்லைக்குள் நுழைந்து அலுவலகத்தை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமென்பதுடன், முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரையம்பதியிலுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகக் கட்டடத்தினுள் ஒரு தொகுதி மக்கள் நுழைந்து அலுவலகத்துக்கான நுழைவாயில் கதவை மூடியதுடன், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி பொருள்களையும் சேதப்படுத்தியிருந்தனர்.
இவ்விடயம் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர,
எமது அலுவலகத்தினுள் புகுந்து நுழைவாயில் கதவை மூடியதுடன், என் கண்முன்னாலேயே ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகத்தின் நான்கு கதவுகளும் வரவேற்பாளர் கூடமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களின் உள்நோக்கம் வேறுவிதமாக இருப்பதாகவே நான் ஊகிக்கின்றேன். கிராம சேவையாளர் தவறு செய்தால் அவரைத் தண்டிப்பதற்கு பிரதேச செயலாளரான நானும் மாவட்டத்துக்கான அரசாங்க அதிபரும் உள்ள நிலையில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், சசிதரன் ஆகியோர் பிரதேச செயலகத்துக்கு வந்து மக்களுடன் பேசி அவர்களது பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமெனத் தெரிவித்தனர்.
4 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago