2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

உயிருக்கு ஆபத்து வந்தால் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனே பொறுப்பு: ஆரையம்பதி பிரதேச செயலாளர்

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

எனது உயிருக்கு ஆபத்து ஏதும் வந்தால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனே பொறுப்பேற்க வேண்டும் என ஆரையம்பதி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன், தனது ஆதாரவர்களை ஆரையம்பதி பிரதேச செயகத்திற்குள் அனுப்பி வேண்டுமென்றே ஒரு குழப்பத்தை பிரசாந்தன் ஏற்படுத்தியருந்தார் என பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.

கிராம உத்தியோகஸ்;தரர் ஒருவர் மீது தனிப்பட்ட ரீதியாக வீணான பழியை சுமத்தி அக்கிராம உத்தியோகஸ்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு என்னை மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் கேட்டிருந்தார்.

நேர்மையான ஒரு கிராம உத்தியோகஸ்தர் மீது என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் குறித்த கிராம உத்தியோகஸ்தர் நிவாரணத்தை பதுக்கி வைத்திருந்தால் பொலிஸார் பார்த்துக்கொள்வார்கள் எனவும் நான் அவரிடம் கூறினேன்.

இதையடுத்து நாம் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குள் நிவாரணப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்து காடைக்கூட்டமொன்றை ஏவிவிட்டு நேற்று திங்கட்கிழமை மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் ரகளை ஏற்படுத்தினார்.

நிவாரணப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுவது வெறும் அபாண்டமாகும்.
எமது பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் போததால் அதை பிரித்து வழங்குவதில் சில சிரமங்கள் ஏற்பட்டன.

நலன்புரி நிலையங்களுக்கு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வழங்கிய அனைத்து பொருட்களையும் வழங்கினோம்.

இதையடுத்து 16ஆம் திகதி சில பொருட்கள் வந்தது. அதை பிரித்து மக்களுக்கு வழங்க இருந்த போது தான் இச்சம்பவம் இடம்பெற்றது.

என்னில் பிழை இருந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கட்டும். அத்துடன் நான் பிழை செய்திருந்தால் அவர்கள் நிரூபிக்கட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--