2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கால்நடை வளர்ப்புக்கான பண்ணைகளை அமைக்க மானிய அடிப்படையிலான கடன்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 19 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைவளர்ப்புக்கான பண்ணைகளை அமைக்க 50வீத மானிய அடிப்படையிலான கடன்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டாமான் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்தரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி, விவசாயதுறை அமைச்சர் நவரெட்ணராஜா, கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றியுள்ள அமைச்சர், வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட கால்நடைவளர்ப்பாளர்களின் விபரங்களை உடனடியாக கோரியுள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சித்தாண்டிப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்புப்பண்இணை புலிபாய்ந்த கல் பிரதேசத்துக்கு மாற்றவும் இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கின்போது ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டாமான், வெள்ளத்தின்போது கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள கால்நடைகளுக்கான நடமாடும் வைத்தியசேவையினை மேற்கொள்ள மூன்று விசேட வைத்தியக்குழுவினர் சில தினங்களில் கிழக்கின் மூன்று மாவட்டத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பராமரிக்க முடியாமல் கால்நடை வளர்ப்பாளர்கள் மாடுகளை இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்வதால் அதனை தடுப்பதற்காக அவற்றினை பெற்று எமது பண்ணைமூலம் சிறந்தமுறையில் பராமரித்து அவற்றினை ஒரு சிறந்த விற்பனையாளர் மூலம் பயன்படக்கூடியவாறு விற்பனை செய்துகொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .