2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

திருப்பெருந்துறை கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 20 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், திருப்பெருந்துறை  கிராம மக்களுக்கான நிவாரணப் பொருட்களை நேற்று புதன்கிழமை வழங்கி வைத்தார்.

இம்மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்து அவர் அங்கு உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணம் மிகவும் பாரியளவில் வளர்ச்சியடைந்து கொண்டு வந்த மாகாணமாகும். ஆனால், திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாணம் பின்னடைவை சந்தித்துள்ளது.  விவசாயம், கால்நடை, பொருளாதாரம், உற்பத்தி, பாதைகள் புனரமைப்பு, கல்வி, சுகாதாரம், ஜீவனோபாயம் போன்றவற்றிலும் பின்னடைவையே சந்தித்துள்ளது. இவற்றை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் பாடுபட வேண்டிய நிலையில் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  

இது இவ்வாறிருக்க, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதில் பல பிரச்சினைகள் கிளம்புகின்றன. ஆரையம்பதி பிரதேசத்தில் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக வரவழைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கிராமசேவை உத்தியோகஸ்த்தர் பதுக்கி வைத்ததாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று மட்டக்களப்பு நகரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படாமைக்கு அதிகாரிகளை கண்டித்து பாரிய கண்டனப் போராட்டமும் இடம்பெற்றது.

மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொருட்களை வழங்காது விட்டால் அது தவறுதான். ஆனால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அரசியல்வாதிகள், பொலிஸ் மற்றும் மேல் அதிகாரிகளிடம் மக்கள் தெரியப்படுத்தவேண்டும். அதைவிடுத்து வன்முறைகளிலோ அல்லது போராட்டங்களிலோ மக்கள் ஈடுபடக்கூடாது.  

நேர்மையான அதிகாரிகளின் மத்தியில் ஒரு சில தப்பான எண்ணமுடைய அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்காக அனைத்து அதிகாரிகளையும் குற்றமிழைத்தவர்களாக நாம் கருதமுடியாது.  அரசாங்கத்தால்  வழங்கப்பட்ட நிவாரணம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதுடன், அவ்வாறு கிடைக்காவிட்டால் நீங்கள் ஆதங்கம்  தெரிவிப்பது நியாயம். ஆனால் அது வன்முறையாகக்கூடாது என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்;பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X