2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஆரையம்பதி பிரதேச செயலக ஊழியர்களை தாக்குதல் நடத்தியமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஜனவரி 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித், சுக்ரி)

ஆரையம்பதி பிரதேச செயலகத்தினுல் நுழைந்து அலுவலக ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியமையைக் கண்டித்து இன்று காலை பிரதேச செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பொது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோசங்களை எழுப்பப்பட்டன.

கடந்த 16ஆம் திகதி ஆரையம்பதியில் கிராம சேவையாளர் ஒருவர் நிவாரணப்பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக ஆரையம்பதி ஆர்.கே.எம் பாடசாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அதனையடுத்து பிரதேச செயலகத்தினுள் 17ஆம் திகதி புகுந்து அலுவலகத்தின் உடமைகளைச் சேதப்படுத்தியதுடன் ஊழியர்களுக்கும் சிலர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--