2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பாலம் உடைந்ததால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை

Kogilavani   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அணுருத்தன்)

வாகரை கட்டுமுறிவு கதிரவெளி வீதியில் அமைந்துள்ள உப்புத்தண்ணீர் கட்டுப்பாலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் உடைந்துள்ளது.

இதனால், கட்டுமுறிவு, ஆண்டான்குளம், தோணிதாண்டமடு, மாணிக்கம்,  போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை இப்பகுதிகளில் பெரும்போக வேளாண்மையை மேற்கொண்ட பிரதேச விவசாயிகள் அறுவடைக்காக இயந்திர சாதனங்களையும் மற்றும் ஏனைய போக்குவரத்து சாதனங்களையும் இடம் நகர்த்த முடியாதுள்ளதுடன்  நோயாளர்களுக்காக அம்புலன்ஸ் வண்டியையும் உபயோகிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே இப்பிரதேச மக்கள்  இப்பாலத்தினை போக்குவரத்து செய்வதற்கு ஏற்ற வகையில் புனரமைப்பு  செய்து தரும்படி  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--