2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

மீன்களுக்கு நோய்: மீனவர்களுக்கு பாதிப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர். அணுருத்தன்)
மட்டக்களப்பு வாகரை ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மீன்களுக்கு நோய் ஏற்பட்டுள்ளதனால் மீனவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை 2 மாதங்களாக  பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்களின் வால்பகுதி,  உடலின் நடு பகுதிகளில் காயத்துடன் கூடிய புழுக்கள் காணப்படுவதாகவும் இதனை பிடித்து உண்பதற்கோ விற்பனை செய்யவோ இயலாத நிலை காணப்படுவதாகவும் வருமானமின்மையால் அன்றாட உணவை உட்கொள்ள முடியாத  அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஓட்டி, செத்தல்,  மணலை, கிழக்கன்,  விரால் போன்ற ஆற்று மீன்களுக்கு இந்நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் மீனினம் அருகி வரும் நிலைமையை கருத்திற் கொண்டு இப்பகுதி மீனவர் சங்கத்தினால் கட்டு வலை கட்டக் கூடாது என்றும் தற்போது இறால் பிடிக்கும் காலமாதலால் வீச்சு வலையை பயன்படுத்தும் படியும் மீன் குஞ்சுகள் வலையில் சிக்கினால் அவற்றை கழற்றி மீண்டும் நீருக்குள் விடும் படியும் விளம்பர சுவரொட்டிகள் வாகரை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--