2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

இந்து மதத்துக்கு எதிரான நாசகார செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது: யோகேஸ்வரன் எம்.பி

Super User   / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

இந்து மதத்துக்கு எதிரான நாசகார செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு. பெரிய கல்லாறு பகுதியில் இனந்தெரியாத நபர்களால் அண்மைக்காலமாக இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள், சிலைகள் மற்றும் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றமை குறித்து கருத்து தெரிவிக்ககையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எமது முன்னோர்களால் பாதுகாத்து வரும் இந்த மதத்தின் வழிபாட்டு தலங்களிலுள்ள பெறுமதி வாய்ந்த சொத்துக்களை யாராயிருப்பினும் ஏன் திருடவேண்டும்?.

இதனால், திருடர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தக்க பாடம் மிக விரைவில் புகட்டுவார். இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் மதப்பிரச்சனைகளை உண்டுபண்ணுபவர்களாக உள்ளார்கள்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--