2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி பலி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

ஜெயந்திபுரத்தைச் சேர்ந்தவரான ஜெயச்சந்திரன் பிரதீப் (வயது 21) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர்.

கடுக்காமுனை வில்லுக்குளத்தில் சக பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது, மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள்  நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பட்டிப்பளை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பொலிஸ் கான்டபிளின் சடலம்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--