2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

வாகன விபத்தில் பெண் ஸ்தலத்தில் பலி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது,   கொழும்பிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு வந்த கனரக வாகனத்தில்   மோதுண்டு பலியாகியுள்ளார்.

ஜீவநகர் வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி தவமணி ஞானசேகரன்; (வயது 42) என்பவரே இவ்விபத்தில் பலியானவர் ஆவார்.

வயல் வேலைக்காக தனது சிநேகிதிகள் இருவருடன் சென்ற இவர், வீதியை கடக்க முற்பட்டவேளையில் எதிரே வந்த கனரக வாகனத்தில் மோதுண்டுள்ளார். இருப்பினும் சிநேகிதிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து உயிர்தப்பியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட வாகன சாரதி மற்றும் உதவியாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .