Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 09 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர். அனுருத்தன்)
ஒரு பாடசாலையின் கல்வி அபிவிருத்தியை வெறுமனே அப் பாடசாலைகளுக்கான பௌதீக வளங்களை மட்டும் வைத்து அளவிட முடியாது. குறித்த பாடசாலையானது முதன் நிலை பாடசாலையாக திகழ வேண்டுமானால் பரீட்சைப் பெறுபேறுகள் முக்கியத்துவம் பெறுகின்றது. பரீட்சைப் பெறுகளை அடிப்படையாகக் கொண்டுதான் பாடசாலைகளின் நிலை தீர்மானிகப்படுகின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு விநாயகர் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்,
பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிப்பதற்காக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள், கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகன் மற்றும் பெற்றோர்களும் முக்கிய பங்காற்றவேண்டும் அப்போதுதான் நாம் எதிர்பார்த்த கல்வி அபிவிருத்தியை எம்மால் எட்ட முடியும் என தெரிவத்தார்.
அதிபர் கிருபாகரன் தலைமையில்யில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம், பிரதித் தவிசாளர் ஜெயராஜ், மட்டு மேற்கு கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், பிரதி கல்விப் பணிப்பாளர் சிறிநேசன், பிரதேச செயலாளர் வில்வரெட்ணம், கல்வி திணைக்களத்தின் கட்டிட பொறியியலாளர் கிருஸ்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கட்டிடம் முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டின் கீழ் 14 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
6 hours ago