Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 10 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
பிரிட்டிஸ் கவுன்சிலின் வகுப்பறை இணைப்பு (Connecting Class Room) திட்டத்தின் கீழ் வட அயர்லாந்து புனித பெற்றிக் (St.Petric) கல்லூரினியினதும் பிரித்தானிய புனித பிரைட் (St.Brighit) பாடசாலையின் ஆசிரிய பிரதி நிதிகள் குழுவொன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.
இக்குழுவானது ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் கல்லூரி, ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஆகியவற்றுக்கு நேற்றும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் விஜயம் மேற்கொண்டதாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.சுபைர் தெரிவித்தார்.
இவர்கள் இப் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல், புறக்கிருத்திய செயற்பாடுகள், மாணவர்களின் விளையாட்டு மற்றும் பிரதேச கலாசார பாரம்பரிய விழுமியங்களை அவதானித்ததாகவும் கோட்டக் கல்வி அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பிரிடிஸ் கவுன்சில் பிரதி நிதிகளுடன் பாபரா வோட், போல் மெய்பின், பேர்னாட்டிக் கனிங், இயன் மேரி பிட்ஸ்பெக்ரிக், இயன் பெல் கெத்தரின் போல்ஸ்டர், மெலீஸா டூம்ஸ், கெலன் சேன்சம், ரியான் டேவிஸ், கெயிட் கோக்கன், ஜோன் டேவிஸ் இவன் ஆகிய பதினொரு பிரித்தானிய ஆசிரியர்கள் குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இக் குழுவுடன் மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர் ஆகியோர் வகுப்பறைகளை பார்வையிட்டனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago