2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பாலர் பாடசாலை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்

Kogilavani   / 2011 ஜூன் 10 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் கீழ், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளையும் கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியக பணிப்பாளர் என்.நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலைகளை நடத்தும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் பாலர் பாடசாலைகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதி நிதிகளுடன்    கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .