2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

உள்ளூர் அரசசார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் அம்பாந்தோட்டைக்கு பயணம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு டெஸ்மியோ நிறுவனமும் வவுணதீவு நெக்டோ நிறுவனமும் இணைந்து ஒழுங்கு செய்த தொழில்நுட்ப வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 27 உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அம்பாந்தோட்டைக்கு நேற்று சனிக்கிழமை பயணம் மேற்கொண்டனர்.

உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளர் ரமேஸ் ஆனந்த் தலைமையில் இக்குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.  இப்பயணம் நான்கு நாட்களைக் கொண்டதாகுமென இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
 
அம்பாந்தோட்டையில் நடைபெறும் பயிற்சியின்போது, காளான் செய்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், கிராமிய கைத்தொழில், நகர அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இந்தப்பயிற்சி திட்டத்துக்கான நிதியினை இலங்கை உதவி ஊக்குவிப்பு மையம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X