2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

வாழைச்சேனை வர்த்தக நிலையங்களிலிருந்து காலாவதியான உணவுகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் பொதுமக்களின் நுகர்விற்கு உதவாத காலவதியான உணவுப்பொருட்கள், இறைச்சி, குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள், மற்றும் சமைத்த உணவுகள் போன்றவற்றை பொதுச்சுகாதார மேற்பார்வை பரிசோதகர் மா.மரியபாலன், மற்றும் கல்குடா பொதுசுகாதார பரிசோதகர் இ.இன்பராசா ஆகியோர் நேற்று  வர்த்தக நிலையங்களில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X