Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 22 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி, ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாநகரசபை பிரிவிலுள்ள சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் மர நடுகை வேலைத்திட்டமொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மனித குலத்திற்கு உகந்த சூழல் மட்டு மாநகரத்தில் வேண்டும் எனும் தலைப்பில் இம்மர நடுகை இடம்பெற்றது.
மட்டக்களப்பிலுள்ள சொன்ட் நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும், வன பரிபாலன திணைக்களம் ஆகியவற்றின் அனுசரனையுடன் இம்மர நடுகை திட்டம் இடம்பெற்றது.
இம்மர நடுகை திட்டத்தின் ஆரம்ப வைபவத்தையொட்டி மட்டக்களப்பு மாநகர எல்லைப்பிரதேச நுழைவாயிலில் இருந்து மரங்களை தாங்கி அதிதிகளும் பாடசாலை மாணவர்களும் ஊர்வலமாக சென்று மரக்கன்றுகளை நாட்டி மர நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் மற்றும் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளையின் தலைவர் ரி.வசந்தராசா உட்பட சொன்ட் நிறுவன அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் பாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago