2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சுவாமி தந்திரதேவா மகராஜின் மூன்றாவது வருட நினைவு தினம்

A.P.Mathan   / 2011 ஜூன் 23 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன், அனுருத்தன் )

சமாதி அடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் மூன்றாவது வருட நினைவு தினம் இன்று காலை வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. சிவஸ்ரீ சா.ராமதாஸ் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் சிலைக்கு பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் மலர் மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அரசடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் இந்து இளைஞர் பேரவையின் உறுப்பினர் கிரிதரன் மங்கல விளக்கேற்று வதையும், சிவஸ்ரீ சா.ராமதாஸ் குருக்கள், கிழக்கு இந்து ஒன்றிய செயலாளர் கதிர்பாரதிதாசன் ஆகியோர் உரையாற்றுவதையும், அறநெறி ஆசிரியருக்கு சிவயோகச் செல்வன் சாம்பசிவம் குருக்கள் பாடசாலை உபகரணம் வழங்கிவைப்பதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .