2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

வாகன விபத்தில் குடும்பஸ்தர் மரணம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 23 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா, ஆர். அனுருத்தன்)

மட்டக்களப்பு  - கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ஓட்டமாவடி – தியாவட்டவானைச் சேர்ந்த டெமர்சியல் ஹேர்னர் (வயது 60)  எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமானவரின் உடல் தற்போது வாழைச்சேனை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .