2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மட்டு - கல்முனை வீதியில் வாகன விபத்து; மூவர் படுகாயம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 24 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையின் கல்லடி பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி வாகன போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த டொல்பின் ரக வேன் முன்னால் சென்றுகொண்டிருந்த லொறியொன்றின் பின்பக்கமாக மோதியபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்வத்தின்போது வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X