2021 மே 06, வியாழக்கிழமை

முஸ்லிம் விவாகம், விவாகரத்து குறித்து சட்ட ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள், காழிமார்கள், பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் முஸ்லிம் திருமணங்களை (நிக்காஹ்) நடத்தும் மௌலவிமார்கள் ஆகியோருக்கு முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சம்மந்தமான சட்ட ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு நேற்று புதன்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ருனே நிறுவனத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் நிஹாறா மெஜூத் கலந்து கொண்டார்.; வளவாளர்களாக கிழக்கு மாகாண உதவிப் பதிவாளர் நாயகம் என்.எம்.நயீம், கல்முனை பிரதேச செயலக காணிப் பதிவாளர் எம்.ஜமால் முஹம்மட், ஓட்டமாவடி பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .