2021 மே 10, திங்கட்கிழமை

வலது குறைந்தோருக்கான உதவித்தொகை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஸரிபா)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வலது குறைந்தவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வும் அரச காணியில் குடியிருந்தவர்களுக்கு ரண்பீம திட்டத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டு வலது குறைந்தோருக்கான காசோலைகளையும், காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்கி வைத்தனர்.

பிறைந்துரைச்சேனை, தியாவட்டுவான், செம்மண்ணோடை கிராமங்களைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு காணி உறுதியும் வலது குறைந்த இருபத்தேழு பேருக்கு ஏழு மாதக் கொடுப்பணவாக தலா ஒவ்வொருவருக்கும் இருபத்தோராயிரம் ரூபாவுக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X