2021 மே 10, திங்கட்கிழமை

இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, சித்தாண்டி வானவில்  இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும்  அறிவூட்டல் பற்றிய கருத்தரங்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் பிரிவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

விநாயகர் கிராம பலநோக்கு கட்டிடத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுயதொழில் வழிகாட்டல்,  கடன் உதவிகள் பெறுவது,  ஏனைய தொழில் பயிற்சிகளை பெறுவது  சம்பந்தமாக விரிவுரையாற்றப்பட்டன.
 
ஏறாவூர்ப்பற்று  இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் கே.அழகுராஜா தலமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நெஸ்க்கோ முகாமையாளர் பி.கிருபைராஜா, தகவல் நிலைய அதிகாரி ரி.மகேந்திரராஜா, ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X