Kogilavani / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான விதை நெல் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் உணவு விவசாய ஸ்தாபனத்தினால் கிழக்கு அவசர உதவி மற்றும் விவசாய மீட்சி திட்டத்தின் கீழ் வாழைச்சேனை கமநல பிரிவில் உள்ள 24 பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இவ் விதை நெல் வழங்கப்பட்டது.
இதன்போது, 2995 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இரண்டு புசல் நெல் வீதம் 13,031 ஏக்கருக்கு 16,062 புசல் நெல் வழங்கப்பட்டது.
கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தலைமையில் நடைபெற்ற விதை நெல் வழங்கும் நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.ருவைத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான விதை நெல்லை வழங்கி வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .