2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

துறவு வாழ்க்கையின் பொன்விழா நிறைவு வாழ்த்து ஆராதனை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

புனித பிரான்சிஸ்கன் மறைபரப்புச் சபையின் அருட் சகோதரர் தோமஸ் ஜோசப் ஜஸ்ரரின் துறவு வாழ்க்கையின் பொன்விழா நிறைவு வாழ்த்து ஆராதனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குருக்கள் மடம் கத்தோலிக்க தேவாலயத்தில் தேத்தாத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரெனிஸ்லொஸ் தலைமையில் நடைபெற்றது.

புனித பிரான்சிஸ்கன் சபையின் மாகாணப் பிரிவும் பங்குத்தந்தை, பங்கு மக்களும் இணைந்து நடத்திய இன்றைய ஆராதனையை திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட துணை ஆயர் ஜோசப் பொன்னையா நடத்தி வைத்தார்.

புத்தளம், கட்டாகாட்டில் பிறந்த அருட் சகோதரர் தோமஸ் ஜோசப் ஜஸ்ரர் தனது ஆரம்பக்கல்வியை சிலாபம் புனித மரியாள் கல்லூரியிலும், உயர் கல்வியை மாத்தளை புனித தோமையார் கல்லூரியிலும் கற்றார்.

கடந்த 8.9.1960 இல்  துறவு வாழ்க்கையில் இணைந்து 25 வருடங்கள் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் ஆசிரியராகவும் பிரதித்தலைவராகவும் பணியாற்றினார்.

தலவாக்கலை, மாத்தளை, சிலாபம் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ள அருட் சகோதரர் தோமஸ் ஜோசப் ஜஸ்ரர் சர்வதேச புனித பிரான்சிஸ்கன் சபையின் தலைவரின் ஆலோசகரிகளில் ஒருவராக கடந்த 2003ஆம் ஆண்டு முதல் ஆறு வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

தற்போது குருக்கள் மடம் புனித பிரான்சிஸ்கன் சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றிவரும் இவரின் துறவுவாழ்க்கை இனிதே நடைபெற பங்கு மக்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

புனித பிரான்சிஸ்கன் மறைபரப்புச் சபையின் சிறுவர் இல்லங்கள், மக்கோனை, மாத்தளை, தலவாக்கலை, சிலாபம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ளன.

மூத்த துறவியும் அருட் சகோதரருமாகிய ஜோசப் ஜஸ்ரரின் பாராட்டு நிகழ்வில், பிரான்சிஸ்கன் சபையின் இலங்கைக்கான மாகாண தலைவர் அருட் சகோதரர் செபஸ்ரியான் தொபியாஸ், மாகாண ஆலோசகர்களும், அருட் சகோதரிகள், அருட் சகோதரர்களான மார்க்கஸ், யேஜார்ச், தியோப்பிளஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--