2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாவட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜெய்க்கா நிதியுதவியுடன் கிழக்கு மாகாணசபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்றது.

மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் மதிப்பீடு மற்றும் முடிவுறுத்தப்பட வேண்டிய வேலைகள் என்பன தொடர்பாகவும்  விளக்கமளிக்கப்பட்டன.

அத்துடன், ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாங்கட்ட வேலைகள் அனைத்தும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதான நிறைவு செய்யப்பட வேண்டுமெனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கருணைநாதன், பிரதம பொறியியலாளர் மஹிந்தா, அமைச்சின் செயலாளர், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X