2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சுயதொழில் ஊக்குவிப்புக் கடன்திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி, ஜயங்கேணி, செங்கலடி, ஏறாவூர் ஆகிய கிராமங்களில்   செயற்பட்டு வரும் சுயவுதவிக் குழுக்களில் இயங்கும் 69 பயனாளிகளுக்கான கடன்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோழி வளர்ப்பு, தையல் சிறுகடை வியாபாரம், மிக்சர் தயாரிப்பு போன்ற  தொழில்களை மேற்கொள்ளும் வகையில், இருபதாயிரம் ரூபா முதல் ஐம்பதாயிரம் ரூபா வரை தலா பத்தொன்பது இலட்சத்து ஜம்பத்தையாயிரம் ரூபா கரித்தாஸ் எகெட் நிறுவனத்தினால்   வாழ்வாதாரத்திட்ட முகாமையாளர் பூ.கந்தசாமி தலைமையின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது

வாழ்வாதார முகாமையாளர் பூ.கந்தசாமி, சிரேஷ்ட ஊக்குவிப்பாளர் சுபாகரன், நிதிப்பிரிவு உத்தியோகஸ்தர் ஜெ.ஆ.அருள்ராஜ், நிறுவக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மைக்கல் ஆகியோர் இவர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X