2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி திட்டத்தினூடாக மேம்படுத்தப்பட்ட குடும்பங்கள் நிவாரண முத்திரைகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

சர்வதேச வறுமையொழிப்புத் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தினூடாக மேம்படுத்தப்பட்ட குடும்பங்கள் தமது சமுர்த்தி நிவாரண முத்திரையினை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளரிடம் கையளித்தனர்.
இந்த சமுர்த்தி நிவாரண முத்திரையினை கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சமுர்த்தி திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரண முத்திரையினைப் பெற்றுவந்த நூறு குடும்பங்கள்  தமது சமுர்த்தி நிவாரண முத்திரைகளை ஒப்படைத்தனர்.

இதில் சமுர்த்தி திரிய பியச வீட்டுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் திறப்புக்களும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் மனோகிதராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளரும் உதவி ஆணையாளருமான பி.குணரட்னம்,  சமுர்த்தி முகாமையாளர்கள,; சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--