2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

உண்டியல் உடைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கைது

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

உண்டியல் உடைத்ததாக சந்தேகிக்கப்படும் அக்கரைப்பற்றை சோந்த ஒருவர் 3,600 ரூபா 50 சதம் சில்லறை பணத்துடன் மட்டக்களப்பு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களபு நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று-01, இல - 152, காதிரியார் வீதியை சோந்த மொகமட் கனிபா நிலாம் அல்லது நஸ்மிம் என்பவரே கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தேகநபரை விசாரணை செய்தபோது, பிச்சை எடுத்த பணம் என தெரிவித்துள்ளார். எனினும் இச்சில்லறை பணத்தில் விபுதி, சந்தணம், மண மற்றும் கல்கள் காணப்படுவதனால் உண்டியல் உடைத்த பணமாக இருக்கலாம் என பொலிஸார்
சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இவரை நேற்று மட்டக்களப்ப நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .