2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

புளுகுணாவ குளம் மீண்டும் திறப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

40 கோடி ரூபா செலவில், ஜப்பான் அரசாங்கத்தின் சமாதானச் செயற்திட்டத்தின் நிதியுதவியில் திருத்தியமைக்கப்பட்ட புளுகுணாவ குளத்தின் திறப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ, ஜப்பானியத் தூதுவர் ஆகியோர் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு எல்லைப்பிரதேசத்தில் அமைந்துள்ள புளுகுணாவ குளமானது யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தக் குளத்தின் திருத்தத்தின் மூலம் மாவட்டத்தின் முக்கிய குளங்களான கங்காணியார் குளம், கடுக்காமுனை வில்லுகுளம் என பல குளங்களுக்கு நீர் கிடைப்பதற்கு வசதி ஏற்படுவதுடன், பெருமளவான விவசாய நிலங்களுக்கும் நீர் விநியோகிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இதனால் பெருமனவான படுவான்கரை விவசாயிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் இன்று பல்வேறு திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X