2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் பாலங்களுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பானிய அரசின் முழுமையான நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 5 பாலங்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு, பணிச்சங்கேணி பாலத்திற்கான ஆரம்ப நிர்மாண வேலைகளை இன்று செவ்வாய்கிழமை வீதி அபிவிருத்தி பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவெல வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்விற்க்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெவ்வை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நா.திரவியம். பூ.பிரசாந்தன், எம்.எச்.இஸ்மாயில், எம்.எஸ்.ஜவாஹிர்சாலி மற்றும் ஜெய்க்கா நிறுவண தலைமை அதிகாரி அக்கிர செய்முறா, அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பாலமானது ரூ.1,060 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 133 மீற்றர் நீளமுடையதாகும். பொதுமக்கள் வெள்ள அனர்த்தம் ஏற்படும் காலங்களில் இப்பாதையினால் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதேவேளை கடந்த வெள்ளத்திலும் இப்பாலத்தினால் சென்ற பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .