Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 28 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
உணவுப் பழக்கவழக்கங்களை இயற்கையாக கையாள்வதன் மூலம் நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடமுடியுமென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் தெரிவித்தார்.
'நீரிழிவு நோயிலிருந்து காப்போம்' என்ற நூல் மற்றும் இறுவட்டு வெளியீட்டு வைபவம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மட்டக்களப்பு நீரிழிவுச் சங்கமும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாவது மாணவ சங்கமும் இணைந்து இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தது.
வைத்தியசாலையின் மட்டக்களப்பு நீரிழிவுச் சங்க தலைவர் டாக்டர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார், மருத்துவபீட பீடாதிபதி கருணாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நீரிழிவு நோயாளர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், கடைப்பிடிக்க வேண்டிய வைத்திய முறைமைகள் தொடர்பிலான கண்காட்சியும் நடைபெற்றது.
32 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
57 minute ago