2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி கடற்கரையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)


மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது.

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் 40 மில்லியன் ரூபா செலவில்  காத்தான்குடி கடற்கரை அழகுபடுத்தப்படவுள்ளது.

காத்தான்குடி கடற்கரையை அழகுபடுத்தும் இத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி கடற்கரை வீதி விஸ்தரிக்கப்பட்டு கார்ப்பட் இடப்படவுள்ளதுடன், வாகனத் தரிப்பிடம், ஓய்வெடுக்கும் கூடம், பூங்கா ஆகியனவும்  அமைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பொறுப்பதிகாரி கேர்ணல் சுதத்திலகரட்ண, காத்தான்குடி நகரசபையின் பிரதித் தவிசாளர் எம்.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அலி சப்ரி, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .