2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கட்டிட தொகுதி திறப்பு

Super User   / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா, ஜவீந்திரா, ஹனீக் அஹமட்)


வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சுமார் 70 மில்லியன் ரூபா நிதியொதுக்கிட்டில் அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சை கட்டிட தொகுதி இன்று  வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ரீ.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஹாபீஸ் நஸீர் அஹமட், ஜேர்மன் செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டிம் பிரே இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க, கிழக்கு மாகான சுகாதர பணிப்பாளர் எம்.தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்  உதவித் திட்டத்தில் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் கூட்டுத் திட்டத்தில் 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சத்திர சிகிச்சை கட்டடத் தொகுதி அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • rncs Thursday, 08 November 2012 01:02 PM

    ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் வாழைச்சேனை மக்களின் வாக்குகளை பெற்றும், நான் வெற்றி பெற்ற பின்பு அனைவரையும் வந்து சந்திப்பேன் என்று தேர்தலுக்கு முதல் சொன்ன அவர் அதன் பிறகு வாழைச்சேனை மக்கள் என்றால் கண்டு கொள்வதும் இல்லை.

    தற்பொழுது அவர் வைத்தியசாலை திறப்பு விழாவிற்காக வாழைச்சேனை வந்துள்ளார் எனவே இவர்களைப் போன்றவார்களுக்கு இன்னமும் எப்படி நாங்கள் நம்பி வாக்கழிக்கப்பது. மற்ற எம்.பி.மார்களைப் போன்று இவரை நாங்கள் நினைக்க வில்லை நம்பி இவருக்காக எங்களது பணிகலைச் செய்தோம் ஆனால் இவர் எங்களை அவரின் தேவை முடிந்ததும் புரக்கணித்து விட்டர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .