2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

புறநெகும திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதிகள் கையளிப்பு

Super User   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


ஏறாவூர் பிரதேசத்தில் புறநெகும திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட இரண்டு வீதிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

புறநெகும திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர சபையினால் 11 மில்லியன் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி வீரபத்திரன் கோயில் வீதி, ஏறாவூர் எல்லைநகர் அதிசய விநாயகர் வீதி ஆகிய இரண்டு வீதியுமே மக்களிடம் கையளிக்கப்பட்டன.

ஏறாவூர் நகர முதல்வர் அலி ஸாகீர் மௌலானா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டு. மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டு வீதிகளை திறந்து வைத்தார். இதன்போது, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி சக்சஸ் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .