2021 ஜனவரி 27, புதன்கிழமை

மட்டக்களப்பில் புற்றுநோயை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நிகழ்வு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சிஹாரா லத்தீப்,
எப்.எம்.பர்ஹான்)

சுகாதார அமைச்சின் ஆய்விற்கமைய புற்றுநோய் பரவும் முதன்மை மாவட்டமாக மட்டக்களப்பு இனங்காணப்பட்டுள்ள நிலையில், அந்நோயைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாக்லை புற்றுநோய் பிரிவு விஷேட திட்டங்களை இம்மாதம் அமுல்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்த விஷேட திட்டத்தின் கீழ் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலங்களை இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தகவல் அதிகாரி தெரிவித்தார்.

இதற்கமைய 'ஆரம்பத்தில் கண்டறிதல் உயிரை காக்கும்' எனும் தொனிப்பொருளில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு அறிவூட்டல் நிகழ்வென்று இன்று வெள்ளிக்கிழமை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம்  தலைமையில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சமூகமட்டத்தில் மார்பக புற்றுநோய், மார்பக புற்றுநோயும் உளநலமும் உட்பட மார்பக புற்றுநோயின் தாக்கமும் இந்நோய்க்கான தடுப்பு முறைகள் பற்றியும் விளக்க உரைகளும் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சுகாதார சௌக்கிய விஞ்ஞானபீடாதிபதி டாக்டர் கே. கருணாகரன், புற்றுநொய் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பார்த்தீபன், புற்றுநோய் வைத்திய அதகாரி டாக்டர் கே.கிரிசுதன் உட்பட பல வைத்திய அதிகாரிகளும் மருத்துவ சேவை பணியாளர்களும் மற்றும் அரசசேவை பணியாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .