2021 ஜனவரி 20, புதன்கிழமை

காத்தான்குடி ஐம் இய்யத்துல் உலமாசபையின் உறுப்பினர் டி.எம்.அன்சார் நளீமிக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (எம்.சுக்ரி,எப்.எம்.பர்ஹான்)


காத்தான்குடி ஐம் இய்யத்துல் உலமா சபையின் உறுப்பினரும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உதவிச் செயலாளருமான டி.எம்.அன்சார் நளீமி இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாசபையினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வு  காத்தான்குடி ஐம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜம் இய்யத்துல் உலமாவின் செயலாளர் ஜிப்ரி மதனி மற்றும் அதன்  பிரதிநிதிகள் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.

இதில் காத்தான்குடி ஐம் இய்யத்துல் உலமாசபையின் சார்பில் அதன் உபதலைவர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹி மற்றும் சம்மேளனம் சார்பில் அதன் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ஆகியோர் உரையாற்றினர்.

இலங்கை நிர்வாக  சேவைப்பரீட்சையில் காத்தான்குடியிலிருந்து முதற்தடவையாக ஒரு மௌலவி சித்தியடைந்தமைக்காக அன்சார் நளீமியை கௌரவித்து அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .