2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தியில் வலது குறைந்தோரை இணைப்பது தொடர்பில் மாநாடு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


எதிர்கால அபிவிருத்தியில் வலது குறைந்தோர்களையும் இணைத்துக்கொள்வது தொடர்பான மாநாடு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மியானி மண்டபத்தில் நடைபெற்ற இந்கிகழ்வில் கிழக்குமாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி.கே.பத்மராஜா, பிறட்டிக்கல் அக்சன் அமைப்பின் இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் விசாகா ஹிடலகே, வலது குறைந்தோருக்கான அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஜனக்க ஹேமதிலக்க, அவ்வமைப்பின் இதிட்ட இணைப்பாளர் அஜித் வெவெல்தெனிய, கிழக்குமாகாண சமூகசேவை பணிப்பாளர் என்.மணிவண்ணன், மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த அரச சரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர் காலத்தில் அபிவிருதி செயற்றிட்டங்களிலும் சமூகத்திலும் வலது குறைந்தோரை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .