2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பொலிஸ் எங்கள் நண்பன் என பொதுமக்கள் நினைக்க வேண்டும்: பூஜித

Super User   / 2012 நவம்பர் 18 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


பொலிஸ் எங்கள் நண்பன். எங்கள் தேவைகளை நாங்களே நேரடியாகச் சென்று நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பொதுமகனும் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

கல்குடா பொலிஸ் பிரிவில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழுக்கலுக்கான மீளாய்வுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.வி.கே.சமரசிங்க தலைமையில் பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தி அதன் மூலம் குற்றச்செயல்களை ஒழிப்பதற்காகவே ஜனாதிபதியின் ஆலோசனையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் வழிகாட்டலில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது போல் சிறுவர் துஷ்பிரயோகம், கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் இல்லாம் ஒழிய வேண்டும். அதற்கு பொலிஸாருடன் சிவில் பாதுகாப்புக் குழுக்களில் உள்ள பொதுமக்கள் சேர்ந்து உழைக்க வேண்டும்
அப்போது தான் அவ்வாறான குற்றச் செயல்களை ஒழிக்க முடியும். இன்று அனோகமான பொலிஸ் நிலையங்களுக்கு மக்கள் தேவைக்காக செல்லும் பொது பொலிஸாருடன் நெருக்கமானவர்களை கூட்டிச் செல்கின்றனர்.

இல்லையேல் பொலிஸில் தெரிந்த பொலிஸ் அதிகாரி இருக்கும் நேரத்தில் சென்றால் நமது வேளைகளை முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளார்கள்.  இவ்வாறு தவறான நம்பிக்கையை கைவிட்டு பொலிஸ் எங்கள் நண்பன் எங்கள் தேவைகளை நான்கள் நேரடியாகச் சென்று நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பொதுமகனும் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .