2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவு

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (ஜதுசன்)
தேசிய ரீதியான உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.

சுகாதார சேவையில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவித்த அவர் இதன் பரிசளிப்பு வைபவம் கொழும்பு பண்டார நாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

14 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்கள் ஊடாகவும் 38 வைத்தியசாலைகள் ஊடாகவும் செய்த மருத்துவ சேவைக்காக இவ்விருது கிடைக்க உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் சேவைபுரியும் 72 வைத்தியர்கள்  உள்ளிட்ட 1633 சுகாதார பணியாளர்களின் சுகாதார சேவைக்காக இவ்விருது கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறைந்த வளத்தில் கூடிய சேவையை வழங்கியமைக்காக தேசிய ரீதியாக இவ்விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .