2021 ஜனவரி 20, புதன்கிழமை

'மயிர்க்கொட்டியால்' பாடசாலைக்கு விடுமுறை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 22 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திற்குற்பட்ட புனானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை வளாகத்தினுள் 'மயிர்க்கொட்டிகள்' ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளதுடன், இந்த 'மயிர்க்கொட்டிகள்' வகுப்பறைக்குள்ளும் சென்றுள்ளதால் அந்த பாடசாலை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

'மயிர்க்கொட்டியால்'; கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த இந்த பாடசாலைக்கு இன்று மருந்து தெளிப்பதால் மேலும் மூன்று நாட்களுக்கு பாடசாலையை மூடிவிடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 09வரை வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. பாடசாலையை சுற்றிய வளாகத்தில் தேக்குமரங்கள் உள்ளன. அந்த மரங்களில் உள்ள 'மயிர்க்கொட்டிகள்' இறங்கி பாடசாலைக்குள் நுழைந்துவிடுவதால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கின்றது.

அத்துடன் 'மயிர்க்கொட்டிகள்' மாணவர்களின் உடலில் விழுவதால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு  முகம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்தே பாடசாலையை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து பாடசாலை தற்காலிகமாக மயிலந்தன்னை சனசமூக நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையில் 'மயிர்க்கொட்டி' பெருகியுள்ளதைத் தொடர்ந்து வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தலைமையிலான குழுவினர் 'பைபந்திரின்' மருந்தினை தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .