2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, வதணகுமார்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் மட்டக்களப்பு தாழங்குடாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

தாழங்குடா சேவாலங்கா பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி நெறியின் இறுதி வைபவம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி நிசாந்தி அருள் மொழி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண கண்காளர் எல்.கே.எஸ்.பாலசூரிய மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் சசிதரன், மண்முனை வடக்கு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் புவேந்திரன், மண்முனைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி பி.பிரசாந்தி உட்பட இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவ தலைவர்களுக்கான சானறிதழ்கள் வழங்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X