2021 மே 06, வியாழக்கிழமை

வாழைச்சேனை மீனவர் சங்கத் தலைவர்கள், தொழிலாளிகளின் குறைநிறைகள் ஆராய்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மீனவர் சங்கத் தலைவர்களையும் மீனவத் தொழிலாளிகளையும்; சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டார்.

பிரதேச மீன்பிடிச்சங்கத் தலைவர்களையும் மீனவத் தொழிலாளர்களையும் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சந்தித்தார்.

இதேவேளை, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அதிகாரிகளிடமும் இவர் கலந்துரையாடினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .