2021 மே 06, வியாழக்கிழமை

காணாமல்போன மீனவர்களின் தோணி கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை வாவியில் திங்கட்கிழமை மாலை காணாமல் போன இரண்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்காக கொண்டுசென்ற தோணியினை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இன்று காலை தொடக்கம் காங்கேயனோடை வாவியில் இந்த இரண்டு மீனவர்களையும் தேடிவரும் கடற்படையினர் இந்த மீனவர்கள் கொண்டு சென்ற தோணியினையும் வலைகளையும் மீட்டெடுத்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

எனினும் காணமால் போன இரண்டு மீனவர்களும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லையெனவும் இவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .