2021 மே 15, சனிக்கிழமை

'சிறுவர்கள் உறவின் பாலமாகிறார்கள்' பயிற்சி பட்டறை

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜிப்ரான்)

'சிறுவர்கள் உறவின் பாலமாகிறார்கள்' எனும் தொனிப்பொருளிலான மூன்று நாள் பயிற்சிப்பட்டறை, செயலாற்றுத்திறன் வெளிப்பாட்டு கருத்தரங்கு மட்டக்களப்பு, மன்றேசா தியான இல்லத்தில் நேற்று ஆரம்பமானது.

சிறுவர் பரிந்துரைப்புக்கான வலையமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் நிதியுதவியில் நடைபெறும் இக்கருத்தரங்கிள் சிறுவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் கழகங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சிப் பட்டறையின் இறுதி நாளான இன்று சிறுவர்களின் 3 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

இதில், இளவயது திருமணம், பாலியல் துஷ்பிரயோகம், மதுபான பாவனை உள்ளிட்ட தலைப்புக்களில் சிறுவர்கள் நாடகங்களை அரங்கேற்றினர்.
கல்வி, வாழ்க்கை, மகிழ்ச்சி போன்ற பல்வேறுபட்ட சிறுவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களது எதிர்பார்ப்புக்கள் எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்; நாடகங்கள் அமைந்திருந்தன.

சிறுவர் பரிந்துரைப்புக்கான வலையமைப்பு ஊடாக இலங்கையின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த 22 மாவட்டங்களிலும் சிறுவர் கழகங்கள் இயங்கி வருகின்றன.

இதுவரை கிழக்கு மாகாணத்துக்கென மட்டக்களப்பில் நடைபெற்ற பயிற்சிக் கருத்தரங்கு செயலாற்றுப் பட்டறை மாத்தளை மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.

மட்டக்களப்பில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் வளவாளர்கள் ஐவர் கலந்து கொண்டனர். அதேநேரம், சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆலோசகர் சட்டத்தரணி திருமதி ஜெனோபா அல்பேர்ட், சிறுவர் பரிந்துரைப்புக்கான வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரும் இணையத்தின் செயலாளருமான வி.ரமேஸ்ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மூன்று நாள் பட்டறையில் பெற்றோர்களுக்காக 'கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக குழுக்களின் பொறுப்புக்களும் கடமைகளும்' எனும் தலைப்பில், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் குகதாசன், 'சிறுவர் பாதுகாப்பும் பராமரிப்பும்' எனும் தலைப்பில் உளநல வைத்தியர் டாக்டர் யுடி ரமேஸ் ஜெயக்குமார், 'சிறுவர் துஸ்பிரயோகமும் சிறுவர் உள நலமும்' எனும் தலைப்பில் உளநல ஆலோசகர் சிறிதரன் ஆகியோரும் கருத்தரங்குகளையும் நடத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .