2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பு வாவிக்கு முதலைகள் படையெடுப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


ஏறாவூரை அண்டிய மட்டக்களப்பு வாவியின் கரையோரத்தில் மாமிசக் கழிவுகள் வீசப்படுவதால் அவற்றை உண்பதற்காக முதலைகள் அங்கு படையெடுத்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாமிசக் கழிவுகளை உண்ண வரும் முதலைகள் நாய்களை பிடித்து உண்பதுடன். பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான தமது மீன்பிடி வலைகளையும் நாசம் செய்வதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இரவிலும் மாலை வேளையிலும் மனிதர்கள் சஞ்சரிக்காத நேரங்களிலும் பார்த்து சுமார் பத்திற்கும் மேற்பட்ட முதலைகள, மாமிசக் கழிவுகளை உண்பதற்காக வாவிக்குள் வருகின்றன.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் உள்ள மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிக் கடைகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளே சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில்  வீசப்படுவதாக பொது மக்களும் மீனவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் ஆற்றங்கரை ஓரமாக உள்ள குப்பை மேட்டுப்பகுதியிலேயே வாவிக்குள் இத்தகைய மாமிசக் கழிவுகள் வீசப்படுகின்றன.

ஏறாவூர் வாவிக்கரையை அண்மித்ததாகவே சிறுவர் பூங்காவும் ஏறாவூர்  பிரதேச செயலகமும் அமைந்துள்ளது பாடசாலையொன்றும் இங்கு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .