2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கொள்ளையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் முன்னாள் போராளி: பொலிஸார்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு - திருமலை வீதி வர்த்தகர் வீட்டுக் கொள்ளையின் பிரதான சந்தேகநபர், முன்னாள் போராளியும் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியவருமாவார் என தெரிவித்த பொலிஸார் அவர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு லயன்ஸ் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தகரான குணரெட்ணம் ஹரிதரன் (34 வயது) என்பவரை வாளால் வெட்டிவிட்டு வீட்டை சூறையாடியதில், 12.45 பவுண் நகையும், ரூபா 53,400 பணம், 99 ஆயிரம் ரூபா பெறுமதியான லப்டொப், 4 கைப்பேசிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இவற்றில் நகை, லப்டொப், கைப்பேசிகள், சிறியளவு பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. மிகுதிப்பணம் மீட்கப்படவில்லை.

முன்னாள் போராளியான பிரதான சந்தேக நபரும் அவரது நண்பர்கள், சகோதரர்கள் அடங்கலான 7 பேர் இந்தக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். வவுனியாவில் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இக்கொள்ளை நடத்தப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .